From : http://www.giriblog.com
கூகுள் + குறுகிய காலத்தில் 20 மில்லியன் பயனாளர்களைப் பெற்று சாதனை படைத்து இருக்கிறது. என்ன தான் கூகுள்க்கு பரந்து விரிந்த வலையமைப்பு இருந்தாலும் இந்த எண்ணிக்கை மிக ஆச்சர்யம் தரக்கூடியதாகவே உள்ளது என்று அனைவரும் கூறுகிறார்கள். அதே சமயம் கடந்த வாரத்தில் கூகுள் + பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன. facebook fan page போல இன்னும் கூகுள் இதில் உருவாக்காமல் தாமதம் செய்து வருவது பலரைக் கடுப்படித்துள்ளது. நிறுவனப் பெயரில் கூகுள்+ கணக்குகளை உருவாக்கி செய்திகளைத் தந்தவர்களின் கணக்கை முடக்கி விட்டது.
ஸ்மார்ட் ஃபோன் இயங்குதளத்தில் (OS) கூகுள் Android கலக்கி வருகிறது. குறுகிய காலத்தில் பலரிடையே வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. தற்போது மொத்த ஸ்மார்ட் ஃபோன் இயங்குதள சந்தையில் 39% இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் Android இயங்குதளத்தை சாம்சங், HTC, Motorola மற்றும் சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன ஆனால் ஆப்பிள் iOS ஒரு தொலைபேசியிலேயே இந்த சதவீதத்தை எட்டி இருக்கிறது. தற்போது Android க்கும் ஆப்பிள் க்கும் தான் கடும் போட்டி. 2015 ல் Android இயங்குதளமே முன்னணியில் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
Android பயன்படுத்துபவர்கள் இது தான் சூப்பர் என்பார்கள் ஆப்பிள் ஃபோன் பயன்படுத்துபவர்கள் iOS தான் சூப்பர் என்பார்கள்
என்னைப்பொறுத்தவரை இரண்டுமே சிறப்பான இயங்கு தளம் தான்.
facebook ல் கூகுள்+ வந்த பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய வசதிகள் மாற்றங்கள் என்று ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். இதைப்போல ஒரு மாற்றத்தில் chat பகுதியை கீழே இருந்து பக்கவாட்டில் வலது பக்கத்திற்கு மாற்றி வைத்துள்ளார்கள். சிலர் இதை ஏற்றுக்கொண்டார்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. எனக்குக்கூட இதைப்போல மாற்றியது பிடிக்கவில்லை. இது பழையபடி மாறுமா இப்படியே தொடருமா! என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
facebook உலகம் முழுவதும் சக்கைப்போடு போடுவது அனைவரும் அறிந்தது. அமெரிக்காவில் தான் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். தற்போது அமெரிக்காவில் அதிகளவில் பார்வையிடும் தளத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. கொஞ்ச வாரம் முன்பு இங்கிலாந்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது நினைவிருக்கலாம்.
Google +
கூகுள் + குறுகிய காலத்தில் 20 மில்லியன் பயனாளர்களைப் பெற்று சாதனை படைத்து இருக்கிறது. என்ன தான் கூகுள்க்கு பரந்து விரிந்த வலையமைப்பு இருந்தாலும் இந்த எண்ணிக்கை மிக ஆச்சர்யம் தரக்கூடியதாகவே உள்ளது என்று அனைவரும் கூறுகிறார்கள். அதே சமயம் கடந்த வாரத்தில் கூகுள் + பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன. facebook fan page போல இன்னும் கூகுள் இதில் உருவாக்காமல் தாமதம் செய்து வருவது பலரைக் கடுப்படித்துள்ளது. நிறுவனப் பெயரில் கூகுள்+ கணக்குகளை உருவாக்கி செய்திகளைத் தந்தவர்களின் கணக்கை முடக்கி விட்டது.கூகுள் போன்ற பெரிய நிறுவனம் இதைப்போல சமூகத்தளங்களை உருவாக்கும் போது fan page போன்ற வசதிகளை உடனே தராமல் நிறுவனங்களுக்கு தாமதம் செய்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. நியாயமாக இதை எல்லாம் முன்பே திட்டமிட்டுத்தான் தன்னுடைய கூகுள்+ ஐ அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். கூகுள்+ ல் பலர் அதிகளவில் விவாதங்களில் ஈடுபடுவது, செய்திகளை பகிர்ந்து (share) கொள்வது போன்றவை மற்ற சமூகத் தளங்களை விட அதிகமாக இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். கூகுள்+ இன்னும் சோதனை அடிப்படையிலேயே இருப்பதால் இன்னும் கொஞ்சம் மாதங்கள் சென்ற பிறகு தான் உண்மை நிலை என்னவென்று தெரிய வரும்.
Android
ஸ்மார்ட் ஃபோன் இயங்குதளத்தில் (OS) கூகுள் Android கலக்கி வருகிறது. குறுகிய காலத்தில் பலரிடையே வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. தற்போது மொத்த ஸ்மார்ட் ஃபோன் இயங்குதள சந்தையில் 39% இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் Android இயங்குதளத்தை சாம்சங், HTC, Motorola மற்றும் சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன ஆனால் ஆப்பிள் iOS ஒரு தொலைபேசியிலேயே இந்த சதவீதத்தை எட்டி இருக்கிறது. தற்போது Android க்கும் ஆப்பிள் க்கும் தான் கடும் போட்டி. 2015 ல் Android இயங்குதளமே முன்னணியில் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
Android பயன்படுத்துபவர்கள் இது தான் சூப்பர் என்பார்கள் ஆப்பிள் ஃபோன் பயன்படுத்துபவர்கள் iOS தான் சூப்பர் என்பார்கள் Gmail double verification
கூகுள் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதன் மூலம் நமது ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க வாய்ப்ப்புகள் அதிகம். தற்போது இந்த வசதியை 150 நாடுகளுக்கு மற்றும் 40 மொழிகளுக்கு கூகுள் விரிவுபடுத்தியுள்ளது. இதை இதுவரை பயன்படுத்தாதவர்கள் இதை பயன்படுத்தும் படி பரிந்துரைக்கிறேன்.
Gmail Lab
ஜிமெயில் பயனாளர்களுக்கு நன்கு பரிச்சியமான கூகுள் Lab ஐ மூடப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் Lab ஒரு அற்புதமான வசதி ஆகும் சோதனை அடிப்படையில் பல்வேறு வசதிகளை நமக்கு தந்து கொண்டு இருந்தார்கள். தற்போது கூகுள் இந்த வசதி தேவையற்ற செலவையும் நேரத்தையும் எடுப்பதாகக் கூறி இதை மூடப்போவதாக அறிவித்து விட்டது. மற்ற சேவைகளில் கவனம் செலுத்த இது உதவும் என்று கருதுகிறது. என்னைப்போன்ற கூகுள் Lab ரசிகர்களுக்கு இது வருத்தமான செய்தி ஆகும் ![இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011] icon sad இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-includes/images/smilies/icon_sad.gif)
facebook chat
facebook ல் கூகுள்+ வந்த பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய வசதிகள் மாற்றங்கள் என்று ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். இதைப்போல ஒரு மாற்றத்தில் chat பகுதியை கீழே இருந்து பக்கவாட்டில் வலது பக்கத்திற்கு மாற்றி வைத்துள்ளார்கள். சிலர் இதை ஏற்றுக்கொண்டார்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. எனக்குக்கூட இதைப்போல மாற்றியது பிடிக்கவில்லை. இது பழையபடி மாறுமா இப்படியே தொடருமா! என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?Google Docs
கூகுள் docs பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் இதில் நமது எந்தக் கோப்புகளை வேண்டும் என்றாலும் சேமித்துக்கொள்ளலாம். முன்பு Doc மட்டுமே இருந்தது பின் இது exe, avi etc என்று அனைத்தையும் சேமிக்க வழி செய்தது. இதன் மூலம் கட்டணம் கட்டி அதிக இடம் வாங்குபவர்கள் தங்களது முக்கியக் கோப்புகளை, திரைப்படங்களை, மென்பொருள்களை எளிதாக சேமிக்க முடிந்தது. இதில் கோப்புகளாக (file) மட்டுமே சேமிக்க முடியும் என்பதை சில மாதங்களுக்கு முன்பு ஃபோல்டர் (folder) மூலம் சேமிக்கலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் ஒவ்வொன்றாக காபி செய்யவேண்டிய அவசியமில்லாமல் மொத்தமாக ஒரு ஃபோல்டரையே எளிதாக காபி செய்ய முடிந்தது. இதில் இன்னொரு கட்டுப்பாடாக காபி செய்யும் கோப்பின் அளவு அதிகபட்சமாக 1 GB தான் இருக்க வேண்டும் என்று இருந்தது. இதை தற்போது 10 GB க்கு உயர்த்தி இருக்கிறது.
கூகுள் Docs இலவசமாக நமக்கு 1 GB இடம் தருகிறது இது இல்லாமல் பணம் கட்டி 20 GB, 100 GB என்று பெறுபவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இதில் திரைப்படம் மென்பொருள் போன்றவற்றை காபி செய்வார்கள் அவர்களுக்கு தற்போது இது மிக பயனுள்ளதாக இருக்கும் காரணம் ஒரே ஒரு AVI file 4 GB கூட இருக்கும்.
Gmail Rar and Zip facility
ஜிமெயில் மற்றும் கூகுள் Docs ல் Rar மற்றும் zip போன்றவற்றை பார்க்க வேண்டும் என்றால் நாம் இந்த மென்பொருளை நிறுவி இருக்க வேண்டும் தற்போது இதை நிறுவாமலே அப்படியே பார்க்க கூகுள் வசதி செய்து இருக்கிறது. rar zip மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கின்றன என்றாலும் இது ஒரு கூடுதல் வசதி தான்.
facebook
facebook உலகம் முழுவதும் சக்கைப்போடு போடுவது அனைவரும் அறிந்தது. அமெரிக்காவில் தான் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். தற்போது அமெரிக்காவில் அதிகளவில் பார்வையிடும் தளத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. கொஞ்ச வாரம் முன்பு இங்கிலாந்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது நினைவிருக்கலாம்.கொசுறு
கூகுள் + வால்பேப்பர் இணைத்துள்ளேன் வேண்டும் என்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

![Smart phone market Android 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Android-150x150.png)
![Android Vs iOS Android Vs iOS 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Android-Vs-iOS-150x150.jpg)
![facebook chat facebook chat 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/facebook-chat-150x150.jpg)
![facebook facebook 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/facebook-150x150.jpg)
![Google +1 Google +1 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+1-150x150.jpg)
![Google +2 Google +2 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+2-150x150.jpg)
![Google +3 Google +3 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+3-150x150.jpg)
![Google +4 Google +4 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+4-150x150.jpg)
![Google +5 Google +5 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+5-150x150.png)
![Google +6 Google +6 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+6-150x150.jpg)
![Google +7 Google +7 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+7-150x150.jpg)
![Google +8 Google +8 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+8-150x150.jpg)
![Google +9 Google +9 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+9-150x150.png)
![Google +10 Google +10 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+10-150x150.png)
![Google +11 Google +11 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+11-150x150.png)
![Google +12 Google +12 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+12-150x150.png)
![Google +13 Google +13 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+13-150x150.png)
![Google +14 Google +14 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+14-150x150.png)
![Google + Google + 150x150 இணையம் பற்றிய செய்திகள் [29 07 2011]](http://www.giriblog.com/wp-content/uploads/2011/07/Google-+-150x150.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக