அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

சனி, 30 ஜூலை, 2011

மும்பைக் குண்டுவெடிப்பு விசாரணையின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தை கொடுமைப்படுத்தாதீர்கள் :- ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்

MG 6492-270x170
மும்பை தொடர் குண்டுவெடிப்பின் விசாரணையின் பெயரால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 
முஸ்லிம்களுக்கு எதிராகநடக்கும் கொடுமைகள் குறித்து ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எதிராக மாநிலங்களவை எம்.பியும் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் செயலாளருமான மவ்லானா மஹ்மூத் மதனி கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும் முன்பே குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்து நடத்தும் பிரச்சாரத்தை ஊடகங்கள் நிறுத்தவேண்டும். குற்றவாளி என தீர்மானிப்பதோவிசாரணை செய்வதோதீர்ப்பு அளிப்பதோ அல்ல ஊடகங்களின் பணி. மாறாக மக்களுக்கு சம்பவத்தின் உண்மை நிலையை எடுத்துக்கூறுவதாகும். மக்களை தவறாக புரிந்துக்கொள்ள வைக்காமல்துணிச்சலுடன் குற்றவாளிகளை எதிர்கொள்ள அரசு தயாராகவேண்டும் என மஹ்மூத் மதனிகோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக