அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

சனி, 30 ஜூலை, 2011

ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் விருதுக்கு சங்கக்கார பெயர் பரிந்துரை


-ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருக்கான விருதுக்கு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) சார்பில், ரசிகர்களின் மனம் கவந்த வீரருக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவ்விருதை, இந்திய அணியின் 'மாஸ்டர் பெட்ஸ்மேன்" சச்சின் பெற்றார்.

இம்முறை இவ்விருதுக்கு, இலங்கை அணியின் குமார் சங்கக்கார, இந்திய அணித் தலைவர் தோனி, தென்னாபிரிக்காவின் அம்லா, மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்தின் ட்ரொட் உள்ளிட்ட ஐந்து வீரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவர்களை, முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் கிளைவ் லாய்டு, பாகிஸ்தானின் ஜாகிர் அப்பாஸ், இங்கிலாந்தின் மைக்கேட்டிங், தென்னாபிரிக்காவின் பால் அடம்ஸ், நியூசிலாந்தின் டேனி மொரிசன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பரிந்துரை செய்தது.

இந்த ஐந்து வீரர்களின் பெயர், ஐ.சி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், தங்களுக்கு பிடித்தமான வீரர்களுக்கு வாக்கு அளிக்கலாம். இதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வரும் செப்., 12ஆம் திகதி லண்டனில் நடக்கும் ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்படும்.

இது குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூன் லோர்கட் கூறுகையில், 'கடந்த ஆண்டு இந்த விருதினை சச்சின் பெற்றார். இது போன்று செல்வாக்கு மிக்க வீரர் இந்திய அணியில் இருப்பது இந்தியாவுக்கு தான் பெருமை. இன்னும் சில தினங்களில் லண்டனில் நடக்கும் ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவில், மக்கள் விரும்பும் மற்றொரு கிரிக்கெட் வீரர் யார் என்பது தெரிந்து விடும்," என்றார். 

Kumar Sangakkara.jpg
Personal information
Full nameKumar Chokshanada Sangakkara
Born27 October 1977 (age 33)
MataleSri Lanka
NicknameSanga
Batting styleLeft-handed
Bowling styleRight arm off break
RoleWicket-keeper, Batsman
International information
National sideSri Lanka
Test debut (cap 84)20 July 2000 v South Africa
Last Test7 July 2011 v England
ODI debut (cap 93)5 July 2000 v Pakistan
Last ODI2 April 2011 v India
ODI shirt no.11
Domestic team information
YearsTeam
1997–presentNondescripts
2008-2010Kings XI Punjab
2007Warwickshire
2011–presentDeccan Chargers
Career statistics
CompetitionTestODIFCLA
Matches96291183387
Runs scored8,307926412,89612,925
Batting average56.1238.0247.7640.01
100s/50s25/3411/6233/5819/83
Top score287138*287156*
Balls bowled66192
Wickets1
Bowling average108.00
5 wickets in innings
10 wickets in match
Best bowling1/13
Catches/stumpings163/20286/74324/33388/99
 

1 கருத்து: