அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

வியாழன், 21 ஜூலை, 2011

ஹாருன் யஹ்யா


ஹாருன் யஹ்யா என்பவர் புகழ்பெற்ற இஸ்லாமிய ஆய்வாளர் ஆவார்.இவரின் இயற்பெயர் அத்னான் ஒக்தார் ஆகும்.

1956ம் ஆன்டு துருக்கியின் தலைநகர் அன்கராவில் பிறந்தார்.  நன்னடத்தையை மக்களுக்கு முழுமையாக போதிக்கும் பொருட்டு தனது வாழ்கையை அர்பணித்துள்ளார். ஒக்தார் அவரது சிந்தனை ரீதியான போராட்டத்தை 1979ம் ஆண்டு மிமார் பல்கலைகழகத்தில் கலையியல் கற்கையிலேயே ஆரம்பித்துவிட்டார். அவரது கல்லூரி வாழ்கையின் போது அவரை சுற்றி காணப்பட்ட நாத்திக சித்தாந்தங்கள் மற்றும் கோட்பாடுகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்தார். அதன் விளைவாக அக் கோட்பாடுகளின் போலியான தோற்றத்தை நுணுக்கமாக தெரிந்து கொண்டார். இந்த நுணுக்கமான அறிவின் காரணமாக பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் பிழைகளை பல புத்தகங்களாக வெளியிட்டடார். அவரது டார்வினிசம் அல்லது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கு எதிரான சிந்தனை போராட்டம் உலகலாவிய ரீதியில் பாராட்டை பெற்றுள்ளது. நியூ சயின்டிஸ் என்ற நாத்திக சஞ்சிகை , அதன் ஏப்ரல் 22 , 2000 பதிப்பில் , ஒக்தார் சர்வதேச நாயகன் என்று பாராட்டியுள்ளது. 


2004 நவம்பர் மாத 'நெஷனல் ஜியோகிரபி" அதன் ஆங்கில மற்றும் ஜெர்மனிய பதிப்பில் ஆசிரியரின் படைப்புகளின் உண்மை என்ற ஆக்கத்தை குறிப்பிடுகிறது. அதில் The Evolution Deceit என்ற புத்தகத்தின் குறிப்பிடப்பட்டுள்ள "உலக சக்திகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடு எனும் பொய்யை எம்மில் வலுக்கபட்டாயமாக திணித்துள்ளன" என்பதையும் குறிப்ட்டுள்ளது.

ஆசிரியர் சியோனிசம் , நாத்திகம் பற்றியும் உலக அரசியல் மற்றும் வரலாற்றில் அது ஏற்படுத்திய மோசமாக தாக்கங்களை தொடர்பாக பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். 

அவரது புனை பெயரான ஹாருன் (ஹாருன் நபி) மற்றும் யஹ்யா (யஹ்யா நபி) பெயர்களை கொண்டுள்ளது. அவர்களது மக்கள் நம்பிக்கை குறைந்தவர்களாக இருந்த வேலையில் அவர்களை திருத்துவதற்காக இவ்விரண்டு மிகப்பெரும் தூதர்களும் மிக கடினமாக உழைத்தார்கள்.

ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் இதுவரை 41 மொழிகளிலும் 45000 பக்கங்கள் 30000 பதிப்புகளாக வெளிவந்துள்ளன. இந்தியா முதல் அமேரிக்கா வரையிலும் இங்கிலாந்து முதல் இந்தோனேசியா வரையிலும் போலந்து முதல் போஸ்னியா, ஸ்பெயின் முதல் பிரேஸில் வரையிலும் மலேசியா முதல் இத்தாலி வரையிலும் பிரான்ஸ் முதல் பல்கேரியா மற்றும் ரஷ்யா வரையிலும் பெரும் வாசகர்களை ஹாருன் யஹ்யா கொண்டுள்ளார். அவரது சில புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜர்மன், ஸ்பானிய, போர்துகீஸிய, உர்து, அரேபிய, அல்பேனிய, சீன, ஸ்வாஹிலி, ஹவ்ஸா, திவேஹி (மொரிஷியஸ் நாட்டில் பேசப்படுகிறது), ரஷ்ய, செர்போ-குரெட் (பொஸ்னியன்), போலிஷ், மலாய், உய்கோர், துருக்கி, இந்தோனேசியன், பென்காலி, டானிஷ், சுவிடிஷ், ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளன ஆசிரியரின் அனைத்து புத்தகங்களும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே எமது குறிக்கோள் ஆகும்.

ஆசிரியரின் அனைத்து ஆக்கங்களும் குர்ஆனோடு முழுiமாயாக ஒத்து போவதை காணலாம். விஞ்ஞான கருத்துகள் பொதுவாக சிக்கலானவை என்று கருதப்படுபவைகளை மிக தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் அனைத்து மக்களையும் , அனைத்து வயதினரையும் கவர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக