அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

Boss you have a Miss Call !!


மிஸ்டு கால் கொடுத்து வாலிபர்களுடன் தொடர்பு பல குரலில் பேசி மயக்கி ^42 லட்சம் பறித்தது எப்படி?

சென்னை: வாலிபர்களின் செல்போன்களுக்கு மிஸ்டுகால் கொடுத்து நட்பை ஏற்படுத்தி பல வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த இளம் பெண் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். 
சென்னை ஓட்டேரி ஜமாலியா நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (25). இவர் ஆண்களிடம் பல குரலில் பேசி லட்சக்கணக்கில் ரூபாயை பறித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 
போலீசாரிடம் பிரியதர்ஷினி கொடுத்த வாக்குமூலம்: நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனது தந்தை சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். எனது அண்ணன் தனியார் செல்போன் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்தார். தந்தை திடீரென இறந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. எனது தோழிகள் வசதியானவர்கள். அவர்களுக்கு பாய் பிரண்ட் உள்ளனர். 
எனக்கும் தோழிகள் போல ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. சீக்கிரம் பணக்காரியாக விரும்பினேன். எனக்கு பேப்பர் படிக்கும் பழக்கம் உண்டு. இணையதளம் மூலம் வாலிபர்கள், வசதியான பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதை படித்துள்ளேன். 

இதனால் எனக்கும் அதே யோசனை தோன்றியது. இதனால், இணையதளத்தில் தொடர்ந்து சாட்டிங் செய்தேன். இதன் மூலம் பல இளைஞர்களின் செல்போன் எண்களை எடுத்து குறித்துக் கொண்டேன். பின்னர், அந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பேன். இப்படிதான், கே.கே. நகரை சேர்ந்த மகேஷ் (28) என்பவரின் செல்போன் எண் கிடைத்தது. 
உடனே அந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன். சிறிது நேரத்துக்கு பிறகு, அவர் என்னை தொடர்பு கொண்டார். எனது தோழியை அழைப்பதற்கு பதிலாக உங்கள் எண்ணுக்கு அழைத்து விட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள் என்று இனிய குரலில் பேசினேன். எனது குரலை கேட்டு அவரும் மயங்கினார். பின்னர், தொடர்ந்து பேச ஆரம்பித்தோம். எங்களது நட்பு வளர ஆரம்பித்தது. இதை பயன்படுத்திக் கொண்டு மகேஷிடம் பணம் பறிக்க முயற்சி செய்தேன். நேரில் வருமாறு அழைத்தார். நான் பேரழகி கிடையாது என்பதால், அழகான எனது தோழியின் போட்டோவை அவரிடம் எடுத்துச் சென்றேன். பிரியதர்ஷினி அவசரமாக வெளியே சென்று விட்டார். அவரது தோழி நான், பிரியதர்ஷினியின் போட்டோவை கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கள் என்று அழகான இளம் பெண்ணின் போட்டோவை காண்பித்தேன். இதில், மயங்கிய மகேஷிடம் விலை உயர்ந்த ஒரு செல்போனையும் கொடுத்தேன். இதனால், பணக்காரி என்று நினைக்க ஆரம்பித்தார். இதை பயன்படுத்தி ^1 லட்சம் வரை பறித்தேன். பின்னர், அவரின் தொடர்பை துண்டித்தேன். இதே பாணியில் மகேஷ் தம்பி சாய் நவீன் (25), மகேஷின் நண்பர்கள் யாசர் அராபத் ஆகியோரை ஏமாற்றி ^42 லட்சம் வரை பணம் பறித்தேன். 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி வைத்திருந்தேன். 
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பெயரில் அறிமுகம் ஆவேன். பணம் கைக்கு வந்தவுடன் சிம்கார்டை தூக்கி எரிந்து விடுவேன். இது, ஒரு தொடர்கதையாக நடந்தது. இந்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினேன். விலை உயர்ந்த பொருட்களாக பயன்படுத்தினேன். சொகுசான வாழ்க்கை காரணமாக இந்த ஏமாற்று வேலையில் இருந்து மீளவே முடியாமல் போனது. 
இவ்வாறு பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக