அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இலங்கை வான் பரப்புக்குள் அமெரிக்க யுத்த விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது




10 அமெரிக்க போர் விமானங்கள்  இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் நுழைந்து பறந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தனது கண்டனத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளது. என்று சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறியுள்ளது என்று விமான படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது . இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர். அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது . ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
from .lankamuslim.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக