இலங்கையில் நாள் தோறும் 3 சிசுக்கள் தாய்மாரினால் படுகொலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று சிசுக்கள் கொல்லப்படுவதுடன், ஒரு பெண் குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சட்டம் மற்றம் நீதிக்கான அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சுமேத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இளம் தாய்மாரினால் தமது குழந்தைகள் கொல்லப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் விவகாரத்து சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட முதல் வருடத்திலேயே அதிகளவான தம்பதியினர் விவாகரத்துச் செய்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில தம்பதியினர் திருமண வீடியோ மற்றும் அல்பங்கள் செய்யப்படுவதற்கு முன்னதாகவே விவகாரத்துப் பெற்றுக் கொள்வதாகவும் இதனால் வீடியோ நிறுவனங்கள் நட்டமடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அநேகமான தம்பதியினர் பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டதன் பின்னர் திருமண பந்தத்தை தொடர்வதற்கு விரும்புவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாழைப்பழம், சித்திரக் கொப்பி அல்லது அப்பிள் ஒன்றை களவாடிய குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் சிறுமியர் மூன்றாண்டு காலம் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர், மதகுருமார் மற்றும் ஆசிரியர்களினால் அதிகளவு சிறுவர் துஸ்பிரயோகச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 72 ஆண்டு பழமையான சட்டமே இன்னமும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் என உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், இலங்கை சட்டத்தில் 14 வயதுக்கு குறைந்தவர்களே சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர். இலங்கையில் வலது குறைந்த 80 வீதமான சிறுவர் சிறுமியர் வாழ்நாளில் பாடசாலை கல்வியைக் கற்பதே இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் பெண்களில் 50 வீதமானவர்களின் பிள்ளைகள் ஐந்து வயதுக்கும் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுடன் சட்ட ரீதியான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக