அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இலங்கை முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் !!!


நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை


அண்மையில் நோர்வேயில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட அன்டர்ஸ் பிஹிரிங் பிரீவிக் என்பவர் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாகும்.
1518 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
2083 ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம் என்ற தலைப்பில் அவர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார்.
நான்காம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களின் மூலம் ஐரோப்பாவை வெளிச் சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
இதேவேளை பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பான தமது உதாரணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதீதமான அமெரிக்க கலாச்சார தாக்கம் ஐரோப்பாவிற்கு ஆரோக்கியமானதல்ல.
ஐரோப்பாவில்  அமெரிக்க படை முகாம்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
ஐரோப்பா, கனடா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

From:  http://www.tamilwin.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக