அருட்கொடை மாதமே வருக!!!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

Well Come

புதன், 3 ஆகஸ்ட், 2011

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்


FROM : http://meelparvai.net/http://english.aljazeera.net


எகிப்தின் முன்னாள் ஜனாதிபி ஹுஸ்னி முபாறக் இன்று கெய்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுகயீனம் காரணமாக விசேட ஹெலிகப்டர் மூலம் ஆஸ்பத்திரி கட்டிலில் வைத்து கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற முதலாவது நீதிமன்ற விசாரணையின்போது அவர் மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஜனவரி 25 ஆம் திகதி நடைபெற்ற எகிப்திய புரட்சியின் போது சுமார் 850 க்கும் அதிகமானவர்களைக் கொலை செய்தமை.
எகிப்தின் கேஸை இஸ்ரவேலுக்கு ஏற்றுமதி செய்தமை
பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை
தன்மீது சுமத்தப்பட்ட இந்த மூன்று குற்றச்சாட்டுக்களையும் அவர் கடுமையாக மறுத்துள்ளார்.
முபாரக்கின் சுகயீனம்,
சட்டத்தரணி பரீத் அத்தீப் (எகிப்தின் பிரபல்யமான குற்றவியல் சட்டத்தரணி) கூறுகையில் ”முன்னாள் ஜனாதிபதி ஆரோக்கியமற்று இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோமா நிலைக்குச் சென்றுள்ளதால் கெய்ரோவுக்குக் கொண்டு செல்ல முடியாது என மறுத்துள்ளார்.”
அதேநேரம் எகிப்திய வைத்தியர்களும் சுகாதார அமைச்சரும் கருத்துத் தெரிவிக்கையில் அவரின் தற்போதைய உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதனால், அவரை கெய்ரோவுக்குக் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக